அமெரிக்காவிற்கு எதிராக…ராணுவத்தில் சேர துடிக்கும் 8,00,000 வட கொரியர்கள்


அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுமார் 8,00,000 பேர் ராணுவத்தில் சேர விரும்புவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.


அதிகரிக்கும் பதற்றம்

தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பதற்றம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

அமெரிக்காவிற்கு எதிராக...ராணுவத்தில் சேர துடிக்கும் 8,00,000 வட கொரியர்கள் | 800000 People Wish To Join N Korea Military AgainsKCNA via Reuters

இதனை வட கொரியா ”ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியதுடன், வட கொரியா தனது Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) கொரிய தீபகற்ப கடல் பிராந்தியத்தில் ஏவியது.

அத்துடன் இது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு வலுவான எச்சரிக்கை என்றும் கண்டித்து இருந்தது.

அமெரிக்காவிற்கு எதிராக...ராணுவத்தில் சேர துடிக்கும் 8,00,000 வட கொரியர்கள் | 800000 People Wish To Join N Korea Military AgainsEPA-EFE


அமெரிக்காவிற்கு எதிராக 8,00,000 வீரர்

இந்நிலையில் கிட்டத்தட்ட 8,00,000 வட கொரியர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்த நாட்டின் ராணுவத்தில் சேர்ந்து போரிட முன்வந்துள்ளனர் என்று வட கொரியாவின் அரசு செய்தித்தாள் ரோடாங் சின்முன் மேற்கோள் காட்டி CNN தெரிவித்துள்ளது.

இந்த செய்தியானது, வட கொரியா தனது Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியதை அடுத்து வெளிவந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.