கனடாவில் இந்திய சீக்கிய மாணவர் மீது தாக்குதல்: தலைப்பாகையை கிழித்து எறிந்த மர்ம கும்பல்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது தலைப்பாகை கிழித்து வீசப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர் மீது தாக்குதல்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவை சேர்ந்த ககன்தீப் சிங் என்ற 21 வயது சீக்கிய மாணவர் மீது வெளிப்படையான வெறுப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ககன்தீப் சிங் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குச் செல்லும் போது தாக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக கவுன்சிலர் மோகினி சிங் தெரிவித்த தகவலில், ”தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே ககன்தீப்பை பார்க்க சென்றேன், அங்கு அவரைப் பார்த்ததும் திகிலடைந்தேன், அவரால் வாய் திறக்கவே முடியவில்லை, மென்மையான தொனியில் மட்டுமே பேச முடிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இந்திய சீக்கிய மாணவர் மீது தாக்குதல்: தலைப்பாகையை கிழித்து எறிந்த மர்ம கும்பல் | 21 Year Old Sikh Student Assaulted In Canada

அத்துடன் தாக்கியவர்களிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று  ககன்தீப் தெரிவித்த நிலையிலும், வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தை விட்டு ககன்தீப் இறங்கியதும் மர்ம கும்பல் அவரை தாக்கியுள்ளது.

அங்கு ககன்தீப்-பின் முகத்திலும் கை கால்களிலும் தாக்கியவர்கள், பின் அவரது தலைப்பாகையை கிழித்து, அவரது தலைமுடியால் நடைபாதையில் இழுத்து சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு பிறகு சுய நினைவுக்கு வந்த ககன்தீப் 911 க்கு அழைத்துள்ளார்.


பீதியில் சக சர்வதேச மாணவர்

ககன்தீப் மீதான இந்த தாக்குதல் பிறகு சக சர்வதேச மாணவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இந்திய சீக்கிய மாணவர் மீது தாக்குதல்: தலைப்பாகையை கிழித்து எறிந்த மர்ம கும்பல் | 21 Year Old Sikh Student Assaulted In Canada

கங்கன்தீப் சீக்கியர் என்பதும், இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும் தாக்குதலுக்கு “சந்தேகத்திற்கு இடமின்றி” காரணம் என்று கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.