தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ மீதான வழக்கில்: 19 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீதான வழக்கில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில்4 குற்றப் பத்திரிகைகளை அந்தந்தமாநிலங்களின் என்ஐஏ நீதிமன்றங்களில் தாக்கல் செய்தது.

இந்த வரிசையில் டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் தொடர்பான வழக்கில் அங்குள்ள என்ஐஏநீதிமன்றத்தில் நேற்று முன்தினம்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பிஎஃப்ஐ தலைவர் சல்மான், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் உட்பட 19 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிஎஃப்ஐ தலைவர் சல்மான் மீதுகுற்றப் பத்திரிகையில் பல்வேறுகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ‘இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற அவர் சதித் திட்டம்தீட்டினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தார். அந்த முகாம்களுக்கு நேரில் சென்று பயிற்சிக்குபயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தார். சிறுபான்மையினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தினார்’ என்று குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப்ஐ தொடர்பான வழக்குகளில் கடந்த சில நாட்களில் மட்டும்5 குற்றப் பத்திரிகைகளை என்ஐஏதாக்கல் செய்துள்ளது. இவற்றில் 105 பேரின் பெயர்கள் உள்ளன.

சாட்சி முக்கிய வாக்குமூலம்

டெல்லி பிஎஃப்ஐ வழக்கில்கைதாகி அரசு தரப்பு சாட்சியாகமாறியுள்ள ஒருவர், மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும். இந்திய ராணுவத்தோடு போரிட்டு வடக்கு பகுதிகளை கைப்பற்ற முயற்சி செய்யும். இதேபோல பிஎஃப்ஐ தொண்டர்கள் இந்தியாவின் தெற்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதை முன்னிறுத்தியே பிஎஃப்ஐ சார்பில் நாடு முழுவதும் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. புதியதீவிரவாத படை தயார் செய்யப்பட்டது. இந்த படை மூலம் மத்திய அரசுக்கு எதிராக போரிட சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

பிஎஃப்ஐ அடையாளம் காட்டும் நபர்களை கொலை செய்ய ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் சமூகத்தில் மதரீதியாக குழப்பம்ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது

பிஎஃப்ஐ அமைப்பு சார்பில் பிஹார் தலைநகர் பாட்னாவில் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தியது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தவழக்கில் 13-வது நபராக பிஎஃப்ஐ மூத்த நிர்வாகி முகமது இர்ஷாத் ஆலம் பிஹாரின் கிழக்கு சம்பிரான் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தெலங்கானாவில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சாகித், சமியுதீன், ஹூசைன், காலீம்ஆகிய 4 பேரை நீதிமன்ற அனுமதியின்பேரில் காவலில் எடுத்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.