தமிழக பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்: செப்டம்பர் 15 முதல் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை!


 2023 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2023-2024 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

இன்று காலை 2023 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன தாக்கல் செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்: செப்டம்பர் 15 முதல் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை! | 2023 2024 Tamilnadu Budget Mk Stalin Thiyagarajan@gettyimages

முக்கிய அம்சங்கள்

  •  செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.410 கோடி செலவில் கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.

  • ரூ.800 கோடி செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.
  • நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பத்திர பதிவு கட்டணம் 4%-ல் இருந்து 2% ஆக குறைக்கப்படுகிறது.

  • மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.
  • 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.
  • சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
  • சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi வசதி செய்து தரப்படும்.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித் துறைக்கு ரூ.22,562 கோடி நிதி ஒதுக்கீடு.

    சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வனம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1248 கோடி ஒதுக்கீடு.

    நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24,476 ஒதுக்கீடு.

  • நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு.
  • எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இந்த இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

  • மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.

    பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு.

  • மீனவர்கள் நலனுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு.

    புதிரை வண்னார்கள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

  • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • குடிமைப்பணி தேர்வுக்காக அரசு போட்டித் தேர்வு மையத்தில் பயில்வோருக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7000 வழங்கப்படும். முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
  • உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
  • தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40 299 கோடி ஒதுக்கீடு

    வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும்.

  • ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
  • சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.
  • மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.
  • தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
  • மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
  • தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

    அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

  • சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.
  • தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.

அதிமுகவினர்  வெளிநடப்பு

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்துவர எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சரின் உரையைத் தவிர எதற்கும் அவையில் தற்போது அனுமதியில்லை என்று கூறினார்.

தமிழக பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்: செப்டம்பர் 15 முதல் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை! | 2023 2024 Tamilnadu Budget Mk Stalin Thiyagarajan@TWITTER

இதனையடுத்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.