ஆஸ்கர் பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஆதரவற்ற யானைககளை வளர்ப்பதைப் பற்றிய டாகுமென்டரியாக அப்படம் உருவானது.

ஆஸ்கர் விருது வென்ற பின் கார்த்திகி சென்னை வந்தார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கினார் முதல்வர். மேலும் ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார்.

“ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டு சென்ற #TheElephantWhisperers இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் அவர்களை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு,” என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.