பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது

நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியதாவது; பங்குனி உத்திர திருநாள் (பங்குளி 22) 05:04-2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைத்து மாநில அரசு அலுவயகங்களுக்கும் நிறுவணங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Luzal Holiday) நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருத்தாது நளவும், மேற்படி 05:04,2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்யுகம் அனைத்தும் நய்யித மாறுகலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1861)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Goverment Securities) தொடர்பாசு அவரைப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலைநாள் பெருந்தாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.