7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான காத்திருப்பு நீடிக்கிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளிய்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை போன்று இம்முறையும் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படும்.

தற்போது ஊழியர்களுக்கு 38 சதவிகித அகவிலைப்படி கிடைக்கிறது

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. நான்கு சதவீதம் அதிகரித்த பிறகு, இது 42 சதவீதமாக அதிகரிக்கும். இது ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். அதாவது ஜனவரி, பிப்ரவரி மாத நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை, அதாவது இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அகவிலைப்படி மீதான ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்படும்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தில் 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இதனுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். பணவீக்க அட்டவணையைப் பார்த்தால், ஜூலை 2022 முதல் டிசம்பர் 2022 வரை, எஐசிபிஐ குறியீட்டில் 2.6 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதில் மொத்த அகவிலைப்படி 4.40% அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2022 இன் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்புதல் கிடைத்தால்தான் அதன் விளைவு பலனளிக்கும். 4 சதவீதம் உயர்வுக்கு பிறகு, மத்திய ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.720 அதிகரிக்கும். இந்த உயர்வு அதிகபட்ச சம்பள வரம்பிற்கு மாதம் ரூ.2276 ஆக இருக்கும். 

லெவல்-3 இன் குறைந்தபட்ச அடிப்படை ஊதிய வரம்பு ரூ.18,000 -க்கான கணக்கீடு இதோ: 

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (42%) – ரூ.7560/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) – ரூ.6840/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 7560-6840 = ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 720X12 = ரூ 8640

42% அகவிலைப்படியுடன், நிலை-3 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 -க்கான கணக்கீடு:

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (42%) – ரூ 23898/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) – ரூ 21622/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 23898-21622 = ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 2276X12 = ரூ 27312

குறிப்பு: இந்த அகவிலைப்படியின் எண்ணிக்கை 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் தற்காலிகமானது. அகவிலைப்படி அதிகரித்த பிறகு, இறுதிக் கணக்கீடு அதிகரிக்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.