NATOவுக்கு எதிராக கை கோர்க்கும் சீனா – ரஷ்யா! அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருமா!

மாஸ்கோ: நேட்டோவுக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் புதிய கூட்டணியை அறிவித்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளின் புதிய சகாப்தத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளன. இதற்கிடையில், உக்ரைன் மோதல் தொடர்பாக சீனாவின் முன்மொழிவுகளை மேற்கத்திய நாடுகள் ஏற்கவில்லை என்று விளாடிமிர் புடின் குற்றம் சாட்டினார். ஜின்பிங்கும், புடினும் மேற்கத்திய படைகளை கட்டுப்படுத்த கூட்டு உத்தியை வகுக்க முடிவு செய்துள்ளனர். ஆசியாவில் நேட்டோவின் விரிவாக்கம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். ரஷ்யா மற்றும் சீனாவை தனது மிகப்பெரிய எதிரிகளாக அமெரிக்கா கருதும் நிலையில், இரு நாடுகளின் இந்த முடிவால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

சீனாவின் அமைதி திட்டத்தை  பாராட்டிய புடின்

உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் 12 அம்ச சீன முன்மொழிவை அவர் பாராட்டினார். இது அனைத்து நாடுகளின் பிராந்திய இறையாண்மைக்கான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அழைப்பு விடுக்கிறது. ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு புடின், சீனாவின் முன்மொழியப்பட்ட சமாதானத் திட்டத்தின் பல விதிகள் அமைதி தீர்வுக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படலாம். ஆனால் கியேவும் மேற்கு நாடுகளும் அதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்றார். இதுவரை அவர்கள் தரப்பில் எண்ணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் புடின் கூறினார்.

மேலும் படிக்க | ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு… அதிபரை பிடிக்க அரெஸ்ட் வாரண்ட் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

உக்ரைனும் அமெரிக்காவும் சீனாவை சந்தேகிக்கின்றன

அதே நேரத்தில், கியே சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும், பெய்ஜிங்கின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சீனாவின் பங்கை நாங்கள் வரவேற்ஜ்க முன்வந்தோம் என்று ஜெலென்ஸ்கி கூறினார். உக்ரைன்  சீனாவுடன் தொடர்பு கொண்டு அதன் பதிலுக்காக காத்திருக்கிறது எனவும் உக்ரைன் கூறியுள்ளது. எனினும், சீனாவை பாரபட்சமற்ற நடுவராக பார்க்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஒத்துழைப்பை வலுப்படுத்திய சீனா  ரஷ்யா

கடந்த பல ஆண்டுகளில் சீனாவும் ரஷ்யாவும் பரஸ்பர ஒத்துழைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை உடைக்க இரு நாடுகளும் பொருளாதார மற்றும் இராணுவ கூட்டணிகளை உருவாக்கியுள்ளன. ஜின்பிங்கின் மாஸ்கோ பயணம் புடினுக்கு ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசு விருந்தில், ரஷ்ய-சீனா ஒத்துழைப்பு  மிகவும் வலுவை சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று புடின் கூறினார். அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சிறப்புத் தன்மையை அவர் வலியுறுத்தினார். ரஷ்யாவுடனான உறவுகள் புதிய சகாப்தத்தில் நுழைவதாக தனது மாஸ்கோ பயணத்தின் இரண்டாவது நாளில் ஜி ஜின்பிங் கூறினார்.

அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருமா?

உலகம் முழுவதும் அமெரிக்க ஆதிக்கத்தை குறைப்பதே சீனா மற்றும் ரஷ்யாவின் முயற்சி. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ராணுவ தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. பொருளாதார சக்தியிலும் அமெரிக்கா தான் அதிக சக்தி வாய்ந்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் தான் நியமிக்கப்படுகிறார். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவை உடைப்பது சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் அவ்வளவு சுலபம் இல்லை எனலாம்.

மேலும் படிக்க | விளாடிமிர் புடின் உலகின் ‘இந்த’ 123 நாடுகளில் அடியெடுத்து வைத்தால் கைது: ICC

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.