நயினார் நாகேந்திரன்: ஆளுநரை விடமாட்றீங்களே? செல்லாது, செல்லாது… மீண்டும் ஃபர்ஸ்ட்ல இருந்து வாங்க!

தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின் போது பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘முதல்வர்

கனத்த இதயத்துடன் ஒரு தீர்மானத்தை, சட்ட முன் வடிவை மீண்டும் இங்கே அறிமுகம் செய்தார்.

நயினார் நாகேந்திரன் பேச்சு

இதை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்காக முதல்வரால் அவையில் முன்வைக்கப்பட்டது. நீங்கள் முதலில் பேசும் போதே ஆளுநரை பற்றி யாரும் எதுவும் பேசக் கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் பேசிய எல்லோரும் ஆளுநரை வாபஸ் பெற வேண்டும் எனப் பேசினர். நாம் எதற்காக இந்த கூட்டம் போட்டுள்ளோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்’ என்றார்.

அப்பாவு அறிவுறுத்தல்

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘உறுப்பினர்கள் மசோதா பற்றி தான் பேசினார்களே தவிர, ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் பேசவில்லை. சில வார்த்தைகள் அப்படி இருந்ததை எல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளோம். உங்களிடம் கேட்காமலேயே நீக்கி இருக்கிறோம். மசோதாவிற்கு வாருங்கள். ஆதரிக்கிறீர்களா? இல்லையா?’ எனக் கேட்டார்.

துரைமுருகன் பளீச்

உடனே அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேச ஆரம்பித்தார். ’உங்களின் பெருந்தன்மை, முதல்வரின் பெருந்தன்மை ஆளுநரை பற்றி எதுவும் பேசக் கூடாது என்பது. ஆனால் அரசியல் சட்டப்படி இந்த சட்டப் பேரவை நிறைவேற்றியதை ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்கக் கூடாது என்று ஆயிரம் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வல்லுநர் குழு

அவர் செய்தது மகா பெரிய தவறு என்பதை சுட்டிக் காட்டி பேசுவதற்கு இந்த அவைக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. ஆனாலும் நீங்க சொல்றீங்க என்பதற்காக நெஞ்சு வரை அடக்கி வைத்துக் கொண்டு கம்மியாக பேசுவதாக’ தெரிவித்தார். இதையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், ’ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

பாஜக முழு ஆதரவு

நாம் பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்து தான் அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். மத்திய அரசு சட்டத்திற்கும், நம்முடைய சட்டத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாக கூறுகின்றனர். எனவே மீண்டும் ஒரு மிகப்பெரிய வல்லுநர் குழுவை அமைத்து நன்கு ஆராய்ந்து அதன் அறிக்கையின் படி மசோதாவை தயாரித்து அனுப்பி வைத்தால் நல்லது.

அதற்கு நாங்கள் முழு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்த விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை’ என்றார். உடனே குறுக்கிட்ட துரைமுருகன், அவர் கருத்து அந்த கட்சியில் இருந்து அவ்வளவு தான் பேச முடியும். அதை விட்டு விட வேண்டும் நீங்கள். குறுக்க பாயக் கூடாது’ என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். இதைக் கேட்டு அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.