ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இனி இவை கூடுதலாக கிடைக்கும்

இமாச்சலப் பிரதேசத்தில் ரேஷன் கார்டு: இமாச்சல பிரதேசத்தில் உள்ள 19.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர் குடும்பங்களுக்கு அரசு ஜாக்பாட் பரிசுகளை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை இப்பொது அரசாங்கம் உயர்த்தியுள்ளது. அந்தவகியில் இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ தரமான கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்க இமாச்சலப் பிரதேச அசரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த அளவு அதிகரிப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு, நுகர்வோருக்கு தற்போது செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஒரு ரேஷன் கார்டுக்கு 7 கிலோ வரை அரிசியும், 13 கிலோ வரை கோதுமை மாவும் வழங்கப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷனை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மிகுந்த நிவாரணம் பெறுவார்கள்.

அதே நேரத்தில், ஊடக அறிக்கையின்படி, போலி ரேஷன் கார்டுகளை முடக்கும் பிரச்சாரம் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. ரேஷன் கார்டுகளில் இரட்டைப் பதிவு வைத்திருந்த ஆயிரக்கணக்கானோர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவுகள் ஊராட்சிகள் மற்றும் டெப்போக்களில் இருந்து தேடப்பட்டு வருகிறது. மேலும், இரட்டை நுழைவு கண்டறியப்பட்டால் அவை உடனடியாக பிளாக் செய்யபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாநில அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நான்கில் மூன்று பருப்பு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மல்கா, மாஷ், தால் சனா மற்றும் மூங் ஆகியவை அடங்கும். இவற்றில், நுகர்வோர் விருப்பமான மூன்று பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன், மாநில அரசு இரண்டு லிட்டர் எண்ணெய் (சுத்திகரிக்கப்பட்ட மற்றும் கடுகு எண்ணெய்), சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உப்புக்கு மானியம் வழங்குகிறது, அதே நேரத்தில் கோதுமை மாவு மற்றும் அரிசியை மத்திய அரசு மானியத்தில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் – 18001800150
உத்தரகாண்ட் – 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் – 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் – 180030061313
ராஜஸ்தான் – 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் – 18004252977
அருணாச்சல பிரதேசம் – 03602244290
அசாம் – 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா – 18001802087
ஹிமாச்சல பிரதேசம் – 18001808026
ஜார்கண்ட் – 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா – 18003456724 / 6760
சிக்கிம் – 18003453236
தமிழ்நாடு – 18004255901
தெலுங்கானா – 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி – 1800110841
ஜம்மு – 18001807106
காஷ்மீர் – 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் – 18003433197
சண்டிகர் – 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ – 18002334004
லட்சத்தீவு – 18004253186
புதுச்சேரி – 18004251082

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.