19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களில் வெற்றி

அபுதாபியில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

 

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் 298 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துவிந்து ரணதுங்க 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தினுர கலுபஹன 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 40.5 ஓவர்களில் 236 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணி சார்பாக துவிந்து ரணதுங்க 46 ஓட்டங்களையும், விஷ்வ ராஜபக்ச 45 ஓட்டங்களையும், சினெத் ஜெயவர்தன 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.