ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த சசிகலா: அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை!

சட்டசபையில் பன்னீர்செல்வம் பேசியதில் எந்த தவறும் இல்லை;

, இபிஎஸ் இருவரையும் இணைத்து பொதுச் செயலாளர் ஆகுவேன் என

கூறியுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இருவரையும் ஒன்றிணைத்து நாங்கள் வெற்றி பெறுவேம் என சசிகலா சீர்காழியில் பேசியுள்ளார்.

அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டமன்றத்தில் பேசியதற்கு

எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது.

கே.பி.முனுசாமி சில எம்.எல்.ஏக்களிடம் பேசி வாக்கு வாதத்தின் சூட்டை தணித்தார். இல்லையேல் நேற்றைய நிகழ்வு கைகலப்பு வரை சென்றிருக்கும். இந்த சம்பவம் குறித்து சசிகலா பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயில் நவகிரக புதன் ஸ்தலத்தில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டசபையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் பேசுவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சட்டசபையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு தீர்மானம் கொண்டு வரும் போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உண்டு. மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு பேரையும் இணைத்து பொதுச் செயலாளர் ஆகுவேன். எதிர்கட்சிகள் எப்படி நினைத்தாலும் தலைவர் போட்ட விதை ,ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி அவர்கள் வழியில் வந்த நான் சிதற விடமாட்டேன். ஒன்று சேர்த்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெறுவதற்கு பாடுபடுவேன்” என சசிகலா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.