7th Pay Commission: அடி தூள்… டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி நேற்று வந்தது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்டது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் உயரும். ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் அடிப்படை ஓய்வூதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு அரசு ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 ஆகவும், அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆகவும் இருந்தால்; அவர் இதுநாள் வரை அகவிலைப்படியாக ரூ.9,690 பெற்றிருப்பார். இப்போது, சமீபத்திய 4 சதவீத டிஏ உயர்வுக்குப் பிறகு, இந்த டிஏ தொகை ரூ.10,710 ஆக உயரும். ஆகையால், இதன் காரணமாக மாத சம்பளம் ரூ.1,020 உயர்த்தப்படும்.

ஓய்வூதியதாரர்க்ளின் ஓய்வூதியம் எவ்வளவு உயரும்?

அதேபோல், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும் அதிகரிக்கும். உதாரணமாக, இதுவரை ஒருவருக்கு மாதம் ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் கிடைத்திருந்தால், அவர் அகவிலைப்படியாக ரூ.11,400 பெற்றிருப்பார். இப்போது, இந்த தொகை ரூ.12,600 ஆக அதிகரிக்கும், இதனால் ஓய்வூதியம் மாதம் ரூ.800 உயர்த்தப்படும்.

4 சதவீதம் உயர்வுக்கு பிறகு, மத்திய ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.720 அதிகரிக்கும். இந்த உயர்வு அதிகபட்ச சம்பள வரம்பிற்கு மாதம் ரூ.2276 ஆக இருக்கும். 

லெவல்-3 இன் குறைந்தபட்ச அடிப்படை ஊதிய வரம்பு ரூ.18,000 -க்கான கணக்கீடு இதோ: 

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (42%) – ரூ.7560/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) – ரூ.6840/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 7560-6840 = ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 720X12 = ரூ 8640

42% அகவிலைப்படியுடன், நிலை-3 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 -க்கான கணக்கீடு:

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (42%) – ரூ 23898/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (38%) – ரூ 21622/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 23898-21622 = ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 2276X12 = ரூ 27312

அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த சில முக்கியமான தகவல்கள்:

– டிஏ உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
– தற்போது, ​​ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெறுவார்கள்.
– இதற்கு முன்னர் அகவிலைப்படியில் செப்டம்பர் 28, 2022 திருத்தம் செய்யப்பட்டது. இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதிதான் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது.
– ஜூன் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12-மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், அகவிலைப்படி நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 38 சதவீதமாக அப்போது உயர்த்தப்பட்டது. 
– விலைவாசி உயர்வை ஈடுகட்ட
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
– தினசரி செலவுகளில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் CPI-IW மூலம் பிரதிபலிக்கிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.