யூரோ தகுதிச்சுற்றில் தெறிக்கவிட்ட ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை


லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

போர்த்துக்கலின் இரண்டாவது போட்டி

யூரோ 2024 தகுதிச்சுற்றில் போர்த்துக்கல் அணி தனது இரண்டாவது போட்டியில் லக்ஸம்பர்க்வுடன் மோதியது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியனோ ரொனால்டோ கோல் அடித்தார்.

ரொனால்டோ/Ronaldo @REUTERS/Piroschka Van De Wouw

அதன் பின்னர் 15வது நிமிடத்தில் ஜோஹா ப்ளெக்ஸ் ஒரு கோலும், 18வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு கோலும் அடித்தனர்.

கோல் மழை

31வது நிமிடத்தில் ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க, போர்த்துக்கல் அணி முதல் பாதியில் 4-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் கோல் அடிக்க லக்ஸம்பர்க் கடுமையாக போராடிய நிலையிலும், போர்த்துக்கல் கோல் வேட்டையை நிறுத்தவில்லை.

ரொனால்டோ/Ronaldo @REUTERS/Piroschka Van De Wouw

ஒடவியோ 77வது நிமிடத்திலும், ரபேல் லீவ் 88வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். இறுதியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

ரொனால்டோ/Ronaldo @Gerry Schmit

யூரோ தகுதிச்சுற்றில் தெறிக்கவிட்ட ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை | Portugal 6 Against Luxembourg Euro Qualifier



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.