இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் இன்று (25) நடைபெறுகிறது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், இன்று (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

அணி வீரர்கள் விபரம் :

இலங்கை – பெதும் நிஸ்ஸங்க, நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, தனன்ஜய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித

நியூசிலாந்து – பின் எலன், சாட் போவ்ஸ், வில் யங், டெரைல் மிச்சல், டொம் லேத்தம், கிளேன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பிளயர் டிக்னர், ஹென்ரி சிப்லே, மெட் ஹென்ரி, இஸ் சோதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.