மாத சம்பளம் வாங்குவோர் தலையில் விழுந்த இடி!!

அதானி நிறுவனத்தால் மாத சம்பளம் வாங்குவோர் தலையில் இடி விழுந்துள்ளது.

அதானியின் நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டு தொகையை விட எல்ஐசிக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதானியால் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் குறைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது.

அந்த தொகையில் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எப் பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்துள்ளது. ஏற்கனவே பி எப் வட்டி விகிதம் 8.1%-ஆக குறைந்துள்ள நிலையில், அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டு இழப்பு காரணமாக வட்டிவிகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இங்கு பலர் அதானியின் முறைகேடுகள் குறித்த கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் அவர்களின் பி.எப் தொகையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.