5% வட்டி வசூலிக்கும் சீனா| China charges 5% interest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: பாகிஸ்தான், இலங்கை போன்ற திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு ரூ.20 லட்சம் கோடி சீனா கடனுதவி அளித்துள்ளது. இதற்கு 5 சதவீத வட்டியும் வசூலிக்கிறது.

latest tamil news

உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியசீனா அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தன் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருபதாண்டுகளில் அந்த நாடுகளுக்கு ரூ. 20 லட்சம் கோடி வரை சீனா கடனுதவி அளித்துள்ளது. ஐ.எம்.எப்., போன்ற சர்வதேச வணிக அமைப்புகள் வழங்கிய கடனுக்கு 2 சதவீதம் வட்டி விதிக்கும்நிலையில் சீனா 5 சதவீதம் வட்டி வசூலிக்கிறது.

latest tamil news

மேலும் கடன் வாங்கும் நாடுகள் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறும் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.