Ajith: ஏகே 62வை மிஸ் பண்ணியிருக்கக்கூடாது.. அதைக்கேட்டாலே கடுப்பாகும் விக்னேஷ் சிவன்!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் விக்னேஷ் சிவன். திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் விக்னேஷ் சிவன்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்

இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை இயக்கி அப்ளாஸை பெற்றார் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62 வது படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் அதனை உறுதி செய்யும் வகையில் தனது சமூக வலைதளங்களில் பல பதிவுகளை ஷேர் செய்து வந்தார்.

Keerthy Suresh: இதுக்கெல்லாம் காரணம் நயன்தாராதான்… போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!

ஆனால் கதை விஷயத்தில் ஏற்பட்ட குளறுபடியால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் அஜித் குறித்து ஷேர் செய்திருந்த பதிவுகளை நீக்கி விட்டார். இதையடுத்து விக்னேஷ் சிவன் அடுத்த என்ன படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. விஜய் சேதுபதியை வைத்து இயக்கப் போகிறார், பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கப் போகிறார் என நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் பாலிவுட் ஹீரோவை வைத்து பேன் இந்தியா படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா சிபாரிசில் இந்த வேலை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவனின் அடுத்த புராஜெக்ட் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு விக்னேஷ் சிவனுக்கு எந்த காரியமும் பாஸிட்டிவாக நடக்கவில்லை என கூறப்படுகிறது.

வரும் வாய்ப்புகளிலும் விக்னேஷ் சிவனுக்கு திருப்தி இல்லை எனவும் தகவல் பரவி வருகிறது.

Nayanthara: அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை… நயன்தாரா குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

மேலும் ஏகே 62 வாய்ப்பை நழுவ விட்டிருக்கக் கூடாது என வருத்தப்பட்டு வருகிறாராம் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அவரிடம் அஜித்தின் ஏகே 62 திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனைக் கேட்ட விக்னேஷ் சிவன் இது தேவையில்லாதா ஒரு கேள்வி என்றார். மேலும் வேற கேள்வி இருந்தால் கேளுங்க பதில் சொல்கிறேன் என தடாலடியாக தெரிவித்தார். ஏற்கனவே வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், அஜித் படம் குறித்து கேட்டாலே கடுப்பாகி வருகிறார் என கூறப்படுகிறது.

Vijay: படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சொல்லிக்காமல் போன ஜோதிகா… வருத்தப்பட்ட விஜய்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.