கனடா சுரங்க ரயில் நிலையத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: வெளிவரும் பின்னணி


கனடாவில் ரொறன்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் பரிதாபமாக மரணமடைந்த சிறுவன் வழக்கில், முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கைதாணை

ரொறன்ரோவில் கீலே ரயில் நிலையத்தில் 16 வயதான Gabriel Magalhaes கொலை வழக்கில் 22 வயதான குற்றவாளி மீது கைதாணை பிறப்பித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கனடா சுரங்க ரயில் நிலையத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: வெளிவரும் பின்னணி | Teen Killed Toronto Subway Station

Credit: by family

கடந்த 2021 ஏப்ரல் 15ம் திகதி 22 வயதான ஜோர்டான் டோபின் மீது நியூஃபவுண்ட்லேண்ட் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.
2020 பிப்ரவரி 7ம் திகதி பொதுமக்களில் சிலர் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து நியூஃபவுண்ட்லேண்ட் பகுதிக்குள் நுழைய அவருக்கு நீதிமன்றம் தடையும் விதித்திருந்தது.
ஆனால், சனிக்கிழமை கீலே ரயில் நிலையத்தில் 16 வயதான Gabriel Magalhaes கொலை வழக்கில் ஜோர்டான் டோபின் சிக்கிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

கீலே ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, ஆண்ட்ரியா என்பவர் தமது மகனுக்கு குறுந்தகவல் அனுப்பி விசாரித்துள்ளார்.
கொல்லப்பட்டது தமது மகன் Gabriel Magalhaes என்பது அப்போது அவர் தெரிந்திருக்கவில்லை.

இப்படியான ஒரு முடிவு

இந்த நிலையில், பொலிசார் அவரது குடியிருப்புக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். தமது மகனுக்கு இப்படியான ஒரு முடிவு வரும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றே ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

கனடா சுரங்க ரயில் நிலையத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: வெளிவரும் பின்னணி | Teen Killed Toronto Subway Station

Credit: by family

இதனிடையே, இரண்டு ஆண்டுகளாக கைதாணை பிறப்பித்தும், பொலிசாரிடம் சிக்காமல் இருந்த ஜோர்டான், தற்போது கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
மேலும், ஜோர்டான் தொடர்பில் ரொறன்ரோ மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் பொலிசாரும் இணைந்து விசாரிக்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.