நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கொல்லப்பட்ட போது பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ!


 அமெரிக்காவின் நாஷ்வில் பாடசாலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பொலிஸாரால் கொல்லப்பட்ட போது பாடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் 28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளிலிருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.

இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கொல்லப்பட்ட போது பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ! | Nashville Shooting Dramatic Bodycam Footage@MNDPNashville

உளவியல் சிகிச்சையில் இருந்து வந்த ஹேல், கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குற்றவாளி திருநங்கை

நாஷ்வில் நகரின் காவல்துறைத் தலைவர் இது குறித்துப் பேசுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், 28 வயதான நாஷ்வில் குடியிருப்பாளரும், அதே கான்வென்ட் பாடசாலையின் முன்னாள் மாணவருமான ஆட்ரி ஹேல் (Audrey Hale) என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மேலும், அவர் ஒரு திருநங்கை என்று தெரிய வந்துள்ளது.

நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கொல்லப்பட்ட போது பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ! | Nashville Shooting Dramatic Bodycam Footage@ABC News

ஆட்ரி ஹேல் குறைந்தபட்சம் இரண்டு தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியுடன் கான்வென்ட் பாடசாலைக்குள் நுழைந்தார்.

ஹேல் ஒரு பக்க நுழைவாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தார், கட்டிடத்தின் வழியாக முன்னேறும்போது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார், பின்னர் பொலிஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

உடல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ

Covenant பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியை கொல்லப்பட்டதை உடல் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் குற்றவாளியை காவல் அதிகாரி துறத்தி சென்று சுட்டு கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ மெட்ரோ நாஷ்வில்லி காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கொல்லப்பட்ட போது பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ! | Nashville Shooting Dramatic Bodycam Footage@Shutterstock

அந்த வீடியோவில் கட்டிடம் முழுவதும் சைரன்கள் மற்றும் அலாரங்கள் ஒலிக்க, வகுப்பறைகளை முறையாக சோதனை செய்யும் பொலிஸ் குழு துப்பாக்கிகள் அணிந்து பதுங்கி, பதுங்கி செல்லும் காட்சிகளை காட்டுகிறது.

“மெட்ரோ காவல்துறை,” அதிகாரிகள் அலறுகிறார்கள்.

“போகலாம், போகலாம்” என்று மற்றொரு அதிகாரி கத்துகிறார்.

மேல்மாடியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் வரவேற்பு பகுதி வழியாகச் செல்கிறார்கள். அங்கே ஐந்து பேர் கொண்ட குழுவால் ஹேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.