வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்… எலான் மஸ்க் போட்ட புது ரூல்ஸ்..!!

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்க கட்டணம் என எட்டுத்ததற்கெல்லாம் கட்டணம் என்கிற நிர்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறார். அந்த வரிசையில் ட்விட்டர் வாக்கெடுப்பிற்கு புதிய விதியை அறிவித்திருக்கிறார்.

அதன்படி, இனி ட்விட்டர் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ( Verified Users)மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தடலாடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள எலான் மஸ்க், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ட்விட்டர் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் AI போர்ட்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கான ஒரே எளிமையான வழி என்றும், இது இல்லையென்றால் வாக்கெடுப்பில் நம்பிக்கைத் தன்மை என்பது இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக எலான் மஸ்க்கின் ட்விட்டர் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் விந்தையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அவர் வெளியிட்ட அறிவிப்பில், ட்விட்டர் நிறுவனம் ப்ளூ சந்தாதாரர்களுடன் விளம்பர வருவாயைப் பகிரப் போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். பிப்ரவரி மாதம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார், ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்த பிறகும் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதே போல், மார்ச் 5 ஆம் தேதிக்குள் ட்விட்டர் நிறுவனத்தின் அல்காரிதத்தை ஓப்பன் சோர்ஸ் செய்வதாகவும் மஸ்க் கூறியிருந்த நிலையில், அதுவும் நடக்கவில்லை.

ஆனால் கொள்கை மற்றும் ட்விட்டர் அம்சங்கள் தொடர்பான அறிவிப்புகள் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வருகின்றன. அதாவது, ட்விட்டருக்கு லாபம் கிடைக்கின்ற ப்ளூ டிக் கட்டண சந்தா, கட்டண சந்தா திட்டங்கள் மட்டும் முழுவீச்சில் அமலுக்கு வருகிறது. அதே போலவே கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற வேண்டும் என்பதற்காக, தற்போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ப்ளூ டிக் பெற வேண்டியது அவசியம் என்றும் எலான் மஸ்க் நிர்பந்தம் விதிப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.