Asus ROG Strix இன் புதிய அதிபயங்கரமான கேமிங் லேப்டாப்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் Gaming Laptop ரசிகர்களை கவரும் விதமாக பிரபல லேப்டாப் நிறுவனமான தைவான் நாட்டை சேர்ந்த Asus அதன் Strix Scar 16 மற்றும் Strix Scar 18 ஆகிய லேப்டாப் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் Zephyrus M16, Strix Scar 17, Zephyrus Duo 16 ஆகிய லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. இந்த கருவிகளில் புதிய 13வது ஜெனெரஷன் INTEL Processor, AMD Ryzen 7000 சீரிஸ், NVidia GPU போன்றவை உள்ளன. இந்த லேப்டாப்களில் புத்தம் புதிய RGB இலுமினேஷன் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Asus ROG Strix Scar 16 மற்றும் Scar 18இதில் தனியாக Customise செய்துகொள்ளும் வசதி உள்ளது. இதனால் இந்த லேப்டாப் டிசைன், கீ போர்டு, கேப் போன்றவற்றை நமக்கு பிடித்தவாறு மாற்றம் செய்துகொள்ளலாம். இவற்றின் அளவு மட்டுமே மாறுபடுகிறது. மற்றவகையில் இந்த இரண்டு லேப்டாப் கருவிகளிலும் Intel 13th Gen CPU , Nvidia GeForce RTX 4000 சீரிஸ், QHD Resolution டிஸ்பிளே, 240HZ Refresh Rate, Adaptive Sync போன்ற வசதிகள் உள்ளன.
Asus ROG Strix Scar 16,18இதன் RAM 64GB மற்றும் ஸ்டோரேஜ் அளவு 4 TB ஆகும். இதன் 18 இன்ச் மாடல் எடை 3.10 கிலோ, 16 இன்ச் மாடல் எடை 2.50 கிலோ உள்ளது.
ROG Strix Scar 16, Asus Strix Scar 18 மாடல் ஆரம்ப விலை 2,79,990 லட்சம் ரூபாய் ஆகும்.
Asus ROG Strix Scar 17இதில் Scar 16 மற்றும் 18 போலவே டிசைன் இருந்தாலும் இவற்றில் AMD Ryzen 9 7945HX CPU வசதி, Nvidia GeForce RTX 4080 GPU, RGB லைட்டிங் வசதி, மெட்டாலிக் ROG லோகோ போன்றவை உள்ளன. இதன் விலை 2,69,990 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது.
Asus ROG Zephyrus Duo 16இதிலும் 16 இன்ச் ஸ்க்ரீன், AMD Ryzen 7000 சீரிஸ் Dragon Range Processor, 90Whr பேட்டரி, 330W அடாப்டிவ் சார்ஜ்ர் அல்லது 100W PD சார்ஜ்ர் இருப்பதால் 50 சார்ஜிங் 30 நிமிடங்களில் அடைந்துவிடும். இதில் 4TB ஸ்டோரேஜ் வசதி, 64GB RAM உள்ளது. இதன் எடை 2.60 கிலோ ஆகும். இதன் விலை 4,29,990 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது.
Asus ROG Zephyrus M16இதில் 16 இன்ச் டிஸ்பிளே வசதி, 16:10 Aspect Ratio, 240HZ Refresh Rate, Dolby Vision HDR இருப்பதால் 1,100 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, Intel Core i9- 13900H CPU, Nvidia Geforce RTX 4090 GPU போன்றவை உள்ளன. இதில் 2TB ஸ்டோரேஜ் வசதி, 64GB RAM வசதி உள்ளது. இதன் எடை 2.30 கிலோ ஆகும். இதன் விலை 2,99,990 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது.​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.