தமிழக விஐபி-யை பார்க்க வருகிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 7ஆம் தேதி முதுமலைக்கு குட்டி யானைகளை வளர்க்கும் பொம்மன், பெள்ளியை பார்க்க வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற “The Elephant Whisperers” திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இக்குழுவினர் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறந்த ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா, கார்திகி கோன்சல்வ்ஸ் ஆகிய இருவரும் நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளனர்.

இந்நிலையில், ஆவணப்படம் யாரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதோ அந்த தம்பதியினரும் உலக அளவில் பிரபலமாகியுள்ளனர். பொம்மன், பெள்ளி தம்பதியின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு பிரதமர் மோடி முதுமலைக்கு வர உள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

50 ஆண்டு புலிகள் பாதுகாப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அப்போது பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திக்கிறார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.