ரஷ்யாவின் நெருங்கிய நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி: ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?


1992ஆம் ஆண்டு முதலே, சீனாவும் ரஷ்யாவும் நட்பு பாராட்டி வருவதை வரலாற்றிலிருந்து அறியலாம். அதுவும், இருவருக்கும் அமெரிக்கா பொதுவான எதிரி என்பது அவர்களுடைய நட்பை இன்னும் பலப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால் சீனா அதற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்தது.
சமீபத்தில் கூட ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார் சீன ஜனாதிபதியான ஜீ ஜின்பிங்.

இந்நிலையில், உக்ரைனுக்கு வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி!

சீஅன் ஜனாதிபதியை எங்கள் நாட்டில் பார்க்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, அவருடன் பேச விரும்புகிறேன், போருக்கு முன் அவரை தொடர்பு கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு ஆண்டுக்கும் மேலாக நான் அவரை தொடர்புகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
 

ரஷ்யாவின் நெருங்கிய நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி: ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? | Zelensky Invited Friend Of Russia To Visit Ukraine

DW

சீன தரப்பின் பதில்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Mao Ning, உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பு குறித்த தகவல் சீனாவுக்குக் கிடைக்கவில்லை என்றும், உக்ரைன் உட்பட அனைத்து தரப்புடனும் தாங்கள் தகவல் தொடர்பை பேணிவருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?

கடந்த வாரம்தான், ஜீ ஜின்பிங்கும் புடினும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். அப்படிப்பட்ட சூழலிலும், சீன ஜனாதிபதி உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் செல்வதற்கு குறுக்கே ரஷ்யா நிற்காது என்று கூறியுள்ளார் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov.

சீனாவின் சமநிலை குறித்து எங்களுக்குத் தெரியும், அதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம், சீனாவின் தலைவர் இதுபோன்ற விடயங்களில் தக்க முடிவுகளைத் தானே எடுப்பவர் என நாங்கள் நம்புகிறோம். அதில் ஆலோசனை எதுவும் கூற எங்களுக்கு உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார் Peskov.
 

ரஷ்யாவின் நெருங்கிய நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி: ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? | Zelensky Invited Friend Of Russia To Visit Ukraine

The sun



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.