வெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீர் தொட்டியில் குதூகலமாக குளித்து மகிழும் யானைகள்..!

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தொட்டியில் தினமும் 3 வேளை குளித்து, வெயிலின் தாக்கத்தை யானைகள் தணித்துகொள்கின்றன.

வெளியே சரியான பராமரிப்பு இல்லாததால், வனத்துறையினர் மீட்டுவரும் யானைகள், 20 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

இங்குள்ள 9 யானைகளுக்கு தர்பூசணி, வாழைப்பழம், முலாம் பழம், முட்டைகோஸ் போன்றவை பரிமாறப்பட்டுவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.