வெளிநாட்டில் வேலைக்காகப் பயணம் செய்யும் இலங்கைப் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு


சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, 

மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு | Sl Females Jobs Abroad Bureau Foreign Employment

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.

வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பெண் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் ஆரம்பத்தில் பாதுகாப்பு வீடுகளை வழங்கியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு | Sl Females Jobs Abroad Bureau Foreign Employment

நோக்கம்

எவ்வாறாயினும், இலங்கை பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சட்டவிரோத முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பயணம் செய்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டால் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தங்குமிடங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கினர்.

சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.