விஜய்யை பார்க்க வேண்டும் என்று குழந்தை ரசிகை ஆசைப்பட்ட நிலையில், நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் குழந்தையிடம் பேசியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என அந்த குழந்தை கூறி இருந்தது. அந்த வீடியோ நேற்று முழுவதும் வைரலாக பரவியது.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த வீடியோவை விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இன்று அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.
இந்த வீடியோ பற்றி அறிந்த விஜய், அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
நலம் விசாரித்த விஜய் குழந்தையை ஒரு நாள் நேரில் அழைத்து வாருங்கள் என்றும் கூறியுள்ளார். விஜய்யின் இந்த செயலால் குழந்தை மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
newstm.in