ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

நியூயார்க்,

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது. இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2016 பிரச்சாரத்தின் போது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியது. இது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது.

டிரம்ப் இந்த குற்றச்சாட்டை “அரசியல் துன்புறுத்தல் மற்றும் தேர்தல் தலையீடு” என்று சாடினார், வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஜனநாயக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொங்கி எழுகிறது. மேலும், இது ஜனாதிபதி ஜோ பிடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சபதம் செய்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.