கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால்…

பட்ஜெட் 2023 மெமோராண்டத்தில், “பல குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பான் அட்டை இல்லை என்பது கவனிக்கப்படுகிறது. இதனால் பிரிவு 192A இன் கீழ் பல கணக்குகளில் அதிகபட்ச விளிம்பு விகிதத்தில் TDS கழிக்கப்படுகிறது. எனவே, சட்டத்தின் பிரிவு 192A க்கு இரண்டாவது விதியைத் தவிர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் பான் எண்ணை அளிக்கத் தவறினால், திரட்டப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்துவதில், 20 சதவீதம் என்ற விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால், அப்போது டிடிஎஸ் கழிக்கப்படும். இபிஎஃப்ஓ உடன் பான் எண் இருந்தால், எடுக்கப்படும் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், டிடிஎஸ் 10 சதவிகிதம் கழிக்கப்படும். எனினும், பான் இல்லாத அல்லது இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட தொகையை எடுப்பதற்கு டிடிஎஸ் விகிதம் 30 சதவீதமாக இருந்தது.

தற்போது டிடிஎஸ் 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் பெறும் குழுவில் உள்ள சம்பளம் பெறும் நபர்களுக்கு உதவும்.

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதில் டிடிஸ் எதுவும் கழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இபிஎஃப்ஓ -​​க்கு படிவம் 15H அல்லது படிவம் 15G ஐ சமர்ப்பிக்கலாம். படிவம் 15G 60 வயதுக்குட்பட்டவர்களுக்கானது மற்றும் படிவம் 15H 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.