Dhanush-Meena: தனுஷ், மீனாவை வைத்து மீண்டும் வதந்தி.. கல்யாண தேதியை பிக்ஸ் செய்த குசும்பர்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Dhanush meena marriage: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம் என்கிற வதந்தி புதுசா ஒரு ரூட்டில் பரவியிருக்கிறது.

​பயில்வான்​காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷுக்கும், கணவரை இழந்து வாடும் மீனாவுக்கும் திருமணம் என நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்தார். மேலும் இருவருக்கும் பாடி டிமான்ட் இருக்கும். அதனால் திருமணம் செய்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை என்றார்.

​Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்

​விளாசல்​பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்ட தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் கோபம் அடைந்து அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தார்கள். இந்நிலையில் தனுஷுக்கும், மீனாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் என வதந்தி பரவியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்களோ, இதுக்கு பயில்வான் ரங்கநாதனே பரவாயில்ல போல. அவராவது திருமணம் என்று மட்டும் தான் சொன்னார். தற்போது என்னவென்றால் ஜூலை மாதம் என்கிறார்கள். அடேங்கப்பா ஒரு வதந்தி எப்படி எல்லாம் டிசைன், டிசைனாக பரவுகிறது என்கிறார்கள்.

​Dhanush:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்

​மீனா​பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தது பற்றி தனுஷ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மீனா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, எனக்கு மறுமணம் என்கிற தகவலில் உண்மையே இல்லை. என் கணவர் இறந்துவிட்டார் என்பதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இந்நிலையில் யார் தான் இது போன்று கிளப்பிவிடுகிறார்களோ. நான் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மகள் நைனிகாவை பார்த்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
​பாவம்​மீனாவே பாவம் கணவரை இழந்துவிட்டு மகள் நைனிகாவுக்காக தைரியமாக இருந்து வருகிறார். தற்போது தான் சிரிக்கத் துவங்கியிருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வருகிறார். படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார். இது பொறுக்காமல் தான் யாரோ அவரை பற்றி வதந்தி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதை எல்லாம் கண்டுக்காதீங்க மீனா. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
​கேப்டன் மில்லர்​ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் தன் படங்களில் பிசியாக இருந்து வருகிறார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இனி திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறாராம் தனுஷ். கடைசி வரை இப்படியே சிங்கிளாக இருந்துவிடுவது என முடிவு செய்திருக்கிறாராம்.

​பங்களா​போபஸ் கார்டன் பகுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகே ரூ. 150 கோடியில் பங்களா கட்டி குடியேறியிருக்கிறார் தனுஷ். அந்த பங்களாவை தன் பெற்றோருக்கு பரிசாக கொடுத்துவிட்டார். தான் ஹீரோவாக வேண்டி வீட்டை விற்று பணம் கொடுத்த அப்பாவுக்கு இப்படி ஒரு பரிசு கொடுத்து அவரை திக்குமுக்காட செய்துவிட்டார் தனுஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.