Viduthalai Part 1: லைப் டைம் கேரக்டர்.. 'விடுதலை' படத்துக்காக பாராட்டுக்களை அள்ளும் சூரி.!

வெற்றிமாறனின் ஹிட் படங்களின் வரிசையில் தற்போது ‘விடுதலை’ படமும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிகாரத்திற்கு எதிரான சாமானியனின் குரலை தனது படங்களின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில் இவரது அடுத்த அதிரடியாக இன்று வெளியாகியுள்ள ‘விடுதலை’ படம் அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தாண்டு கோலிவுட் திரையுலகினரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘விடுதலை’. ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். தனுஷை இயக்கிய கையோடு சூரியை ஹீரோவாக்கி படம் இயக்க போகிறார் என்றதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும் இந்தப்படத்திற்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆரவாரமாக ரெடியானார் சூரி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

காவல் துறையின் அத்துமீறல்களை எதிர்த்து கேள்வி எழுப்பிய ‘விசாரணை’ படம் போலவே ‘விடுதலை’ படத்தையும் உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற நாவலை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘விடுதலை’ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. அத்துடன் தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வந்த சூரி இந்தப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். முக்கியமாக இந்தப்படத்தில் பல ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்தது குறித்து சூரி பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

அடுத்து ஒரு பெரிய ஆபரேஷன்.. உயிரே போகலாம்: கலங்க வைக்கும் சிறுத்தை சிவாவின் தம்பி.!

இந்நிலையில் இன்று ‘விடுதலை’ படத்தை பார்த்தவர்கள் நிஜமாகவே சூரி பேட்டிகளில் கூறியதை சண்டை காட்சிகளில் உயிரை கொடுத்து நடித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் இவ்வளவு நாட்கள் அவரை காமெடி ரோலில் பார்த்திருந்தாலும் ‘விடுதலை’ படத்தில் தயக்கமின்றி ஹீரோவாக ஏற்றுக்கொள்ளும் விதமாக உயிரை கொடுத்து சூரி நடித்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leo: ‘லியோ’ படத்தின் அடுத்த மரண மாஸ் அப்டேட்: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்.!

காவல்துறை அதிகாரியாக நேர்மை தவறாத குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி பாராட்டுக்களை அள்ளியுள்ளார். காதல் காட்சிகளிலும் உறுத்தல் இல்லாத நடிப்பை சூரி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அத்துடன் ‘விடுதலை’ படத்தில் சூரிக்கு கிடைத்துள்ள கதாபாத்திரம் லைப் டைம் கேரக்டர் எனவும், இந்தப்படத்தின் நடிப்புக்காக பல விருதுகளையும் அவர் அள்ளலாம் எனவும் ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.