நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிஸியாகிவிட்டார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தவர், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் வெற்றிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி தனது கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர், தற்போது ஒரு நீச்சல் குளத்தின் அருகே நடத்திய போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு … Read more

Dasara success meet : ஒரே நாளில் தசரா படத்தின் வெற்றிவிழாவை கொண்டாடிய நானி -கீர்த்தி!

சென்னை : நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது தசரா. இந்தப் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை படம் தற்போது சிறப்பாக பூர்த்தி செய்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. தசரா படம் நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய்குமார், தீக் … Read more

வீட்டிற்கு வர மறுத்த மனைவி – ஆத்திரத்தில் கை குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்த கணவர் கைது.!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.  இதற்கிடையே கவுசல்யா கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில், கவுசல்யாவிற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோர் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து நேற்று ரஞ்சித்குமார் கவுசல்யாவின் வீட்டிற்கு சென்று, அவரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கவுசல்யா மறுப்புத் தெரிவித்துள்ளார். … Read more

சுயஉதவி குழு விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் அத்துறையின் கீழ் வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம்,காலை சிற்றுண்டி திட்டம் என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பல்வேறு … Read more

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி

முச்சக்கரவண்டியில் வந்த  அடையாளம் தெரியாத சிலர், குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – மட்டக்குளியில் இன்று (31.03.2023) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டுச் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர் … Read more

டொனால்டு டிரம்புக்கு கைவிலங்கு இடப்படுமா? 30 பிரிவுகளில் வழக்குப் பதிவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, பிரித்தானிய நேரப்படி மதியத்திற்கு மேல் 7.15 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறை முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது 30 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்ட ஒருவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. @AP வியாழன் அன்று வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், தொழில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 67 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான சௌந்தரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.   இதனையடுத்து … Read more

கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி

புதுடெல்லி:  வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில்,  ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு  9 பேர் மயக்கமடைந்து உயிருக்கு போராடினர்.  இதில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மற்ற மூன்று பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் இரவில் தூங்கும்போது கொசுவை விரட்டுவதற்காக ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது கவிழ்ந்து விழுந்து தீ பற்றியது தெரியவந்தது.