ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் நிலுவை எவ்வளவு? – பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உச்ச நீதின்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பிறகு இந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பிறகு கடந்த ஜனவரி 9-ம் தேதி இந்த … Read more

அரியலூர் மருத்துவக் கல்லூரி: அனிதா பெயரில் புதிய அரங்கம் – முதல்வர் அறிவிப்பு!

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார். தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் … Read more

Rajinikanth, Ajith: கதையை மாற்ற சொன்ன ரஜினி… இயக்குநரின் பிடிவாதத்தால் சிக்கி சின்னபின்னமான அஜித்!

பிரபல இயக்குநரின் கதையை ரஜினிகாந்த் மாற்ற சொன்னதும் அதில் அஜித் நடித்து இந்த படம் தோல்வியை சந்தித்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமிஆனந்தம் என்ற குடும்ப சித்திரத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. அடுத்தாக மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. இந்தப் படம் செம்ம ஹிட்டானது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் லிங்குசாமி, ரஜினிகாந்துடன் நிகழ்ந்த சுவாரசிய தகவல் குறித்து பகிர்ந்துள்ளார். ​ Vijayakanth: இறுதிச்சடங்கிற்கு … Read more

Samsung Galaxy Ultra ஸ்மார்ட்போனின் 'Moon Camera' வசதி போலியா? அம்பலப்படுத்திய பயனர்!

ஆண்ட்ராய்டு உலகில் மிக சிறந்த ஸ்மார்ட்போனாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 Ultra போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 1.5 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸ் நிகராக இருக்கும் ஒரு போன் ஆகும். இந்த போனின் Moon Camera வசதியை உலகில் பலர் மிகவும் ஆச்சர்யமுடன் பார்க்கிறார்கள். எப்படி பூமியில் இருந்து நிலாவை நாம் எடுக்கும் புகைப்படம் இவ்வளவு தெளிவாக உள்ளது? என்று பலர் வியக்கிறார்கள். நேரடியாக நாம் … Read more

சூர்யாவை விட மாஸ் லுக்கில் அருண் விஜய்! லீக் ஆன வணங்கான் புகைப்படம்!

பாலா படங்கள் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அவர் படத்தில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த மாதிரியான கெட்டப்பில் இருப்பார்கள் என்பது தான்.  நடிகர்களின் கெட்டப்பை வைத்தே இது பாலா இயக்கத்தில் வெளியான படம் என்பதை கண்டுபிடித்து விடலாம், அந்தளவிற்கு இவரது நடிக்கும் நட்சத்திரங்களின் கெட்டப் தனித்துவமாக இருக்கும்.  தற்போது இயக்குனர் பாலா ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இதில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.  … Read more

பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதிக ஆபத்து மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்ததில், இடுபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். Source … Read more

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஐந்தரை ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். Source link

வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும்,  22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை … Read more

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பிராத்தனை

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பிராத்தனை செய்தார். விமானம் மூலம் அவரது தாயுடன் தமிழகம் வந்த சங்மா வேளாங்கண்ணிக்கு சென்று பிராத்தனை செய்தார்.

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து

டெல்லி: RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. RRR படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்.