இரு நாடுகளுக்குள்ள உறவு குறித்து ஆஸி. அமைச்சர் தெரிவித்த தகவலை பகிர்ந்த பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிறந்த கலாச்சார உறவு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய தகவலை, ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் டான் பேர்ரல் மற்றும் உயரதிகாரிகள் குழு வந்திருந்தது. பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இரு … Read more

Vijayakanth: இறுதிச்சடங்கிற்கு பணமில்லாமல் தவித்த நடிகையின் குடும்பம்.. யாருக்கும் தெரியாமல் விஜயகாந்த் செய்த உதவி… நெகிழ்ந்த பிரபலம்!

இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த நடிகையின் குடும்பத்திற்கு யாருக்கும் தெரியாமல் நடிகர் விஜயகாந்த் செய்த உதவி குறித்து நெகிழ்ந்துள்ளார் பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன். நடிகர் விஜயகாந்த்தமிழ் சினிமாவில் 1979ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. ஆனால் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் தெலுங்கு, இந்தி என … Read more

7th Pay Commission: விரைவில் ஊதியக்கமிஷன் விதிகளில் மாற்றம், ஊதியத்தில் ஏற்றம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு (டிஏ) விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்த விவாதமும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 7வது ஊதியக் குழுவின் விதிகளை 8வது ஊதியக் குழுவில் மாற்றுவது குறித்து சில காலமாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, மத்திய பட்ஜெட் 2023 இல் 8வது ஊதியக் குழு அமலாக்கத் திட்டம் பற்றி சில தகவல்கள் வெளிவரக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரி 1, 2023 அன்று, … Read more

மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அங்கிருந்த திறந்தவெளி போர்வெல் கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்ப வ இடத்திற்கு விரைந்த தேசிய மீட்பு படைக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி … Read more

என்ன Whatsapp பணம் அனுப்பமுடியுமா? எப்படி செய்யலாம்?

Whatsapp எனப்படுவது வேகமாக குறுஞ்செய்திகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு ஆப் ஆகும். அதிலே தற்போது பணம் அனுப்பும் வசதியும் வந்துள்ளது.   இந்த வசதி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.  எப்படி அனுப்புவது? முதலில் WhatsApp திறந்து More options என்பதை கிளிக் செய்து Settings உள்ளே சென்று choose Payments options கிளிக் செய்யவும். அதன் பின் Add new account சென்று WhatsApp Pay விதிமுறைகள் … Read more

தன்பாலினத் திருமண அங்கீகார வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன் படி தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்தசில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இந்த … Read more

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு உள்ளிட்ட கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 6,000 பணியிடங்கள் நேரடியாகவும், 4,000 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்படும் என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிறப்பு கூறு நிதி மூலம் நிலம் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் ரங்கசாமி பதில் அளித்தார். புதுச்சேரியில் பட்டியலினத்தினருக்கான சிறப்பு கூறு நிதியில் 49 சதவீதம் மட்டுமே செலவு செய்ததாக திமுக புகார் தெரிவித்திருந்தது. எஞ்சிய 51 சதவீதம் நிதியை செலவிடாதது தவறு என்று திமுக உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் அங்காளன் … Read more

நாமக்கல்: 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் பெண்ணின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சிமோகனூர் போலீசார் விசாரணை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி காக்கா தோப்பு, புது தெருவைச் சேர்ந்தவர்கள் கோபி – குணவதி தம்பதியர். இவர்களுக்கு சுஜித் பிரியன், பிரணவ் பிரியன் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கோபி தனது மாமனார் கேசவனுடன் மோகனூர் உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு … Read more