ஏப்., முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை| Most parts of India to witness above-normal temperatures from Apr-Jun: IMD

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ” ஏப்ரல் முதல் ஜூன் வரை வட மேற்கு மற்றும் தீபகற்ப பகுதிகளை தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்”, என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மஹபத்ரா கூறியதாவது: பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிகளவு வெப்பஅலை வீசக்கூடும்.

latest tamil news

ஏப்ரல் முதல் ஜூன் வரை, தெற்கு தீபகற்பம் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக பதிவாகக்கூடும்.

தெற்கு தீபகற்பம் மற்றும் வடமேற்கு இந்தியாவில், இயல்பான அளவு மற்றும் அதற்கு கீழ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.