Airtel Digital TV vs Airtel xstream இரண்டில் எது வாங்கறது பெஸ்ட்?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக Airtel நிறுவனம் அதன் STB எனப்படும் (smart Setup Box) ஒன்றை அறிமுகம் செய்தது. Android மூலம் இயங்கும் இந்த கருவி மூலமாக நாம் OTT தொடர்களை பார்க்கலாம். இதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியமான ஒன்றாக உள்ளது. இதேபோல Airtel DTH HD Setup Box ஒன்றும் உள்ளது. இந்த இரண்டில் வாடிக்கையாளர்கள் எதை தேர்வு செய்யலாம்? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

Airtel Digital TV HD

இந்த கருவி மூலமாக நாம் நேரடி தொலைக்காட்சி தொடர்களை பார்க்கலாம். இதன் விலை 750 ரூபாய் ஆகும். இந்த கருவியில் Dolby Digital Sound, Record and Play என பல வசதிகள் உள்ளன. நம்மிடம் ஸ்மார்ட் டிவி ஏற்கனவே இருந்தால் இந்த Airtel Digital TV வாங்கலாம்.

Airtel Xstream Box

இதன் விலை 1500 ரூபாய் ஆகும். இது சாதாரண HD செட் அப் பாக்ஸ் விலையை விட இரண்டு மடங்கு அதிக விலையில் உள்ளது. அதேநேரம் OTT, Chromecast, Dolby என ஸ்மார்ட் டிவி உள்ளே இருக்கும் அனைத்து அம்சங்களையும் இதில் பெறலாம். ஸ்மார்ட் டிவி வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் இந்த Xstream Box வாங்குவது நல்லது. இந்த Airtel XStream Box போலவே டாடா நிறுவனம் Tata Play Binge+ அப் பாக்ஸ் ஒன்றை வழங்குகிறது. இதற்கு முன்னதாக அது TATA Sky என்று அழைக்கப்பட்டது. இதிலும் நாம் OTT தளங்களை பார்க்கமுடியும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.