அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; எடப்பாடி தலைமையில் முக்கிய முடிவுகள்!

அதிமுக என்றாலே பிரதான எதிர்க்கட்சி என்பதை தாண்டி, சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று தான் கேட்க தோன்றுகிறது. அந்த அளவிற்கு கடந்த ஜூலை 11, 2022 தொடங்கி தற்போது வரை சட்ட சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. கடைசியாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து

மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிமன்ற வழக்குகள்

இதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அதில், இறுதி விசாரணைக்கு தயார் என்று இருதரப்பும் ஒருமனதாக தெரிவித்தது. எனவே வரும் 3ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

ஆலோசனை கூட்டம்

இத்தகைய சூழலில் வரும் 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எடப்பாடி அழைப்பு

அதிமுகவின் பொதுச் செயலாளராக

பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடியை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தால் இனி சிக்கல் வராது. தனக்கு எதிரான சட்டப் போராட்டங்களை தவிடு பொடியாக்க வழக்கறிஞர்கள் குழு தயாராக இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மக்களவை தேர்தல்

எனவே 2024 மக்களவை தேர்தலுக்கான வேலைகளில் செலுத்த வாய்ப்புண்டு. இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒன்று கூட்டணி. மற்றொன்று மாவட்ட வாரியாக தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்துவது. கூட்டணியை பொறுத்தவரை பாஜக உடன் எந்த முரண்பாடும் இல்லை என இருதரப்பும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அடுத்தகட்டமாக சிறிய கட்சிகளுக்கு காய் நகர்த்த வேண்டும்.

மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

மறுபுறம் மாவட்ட வாரியாக அதிமுகவின் செல்வாக்கை வலுப்படுத்துவது அவசியம். இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி வரும் 7ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம். மேலும் பிரிந்து போன அதிமுக புள்ளிகளை மீண்டும் வசப்படுத்த அசைன்மென்ட்கள் கொடுக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,

மற்றும் பாஜக தரப்பில் இருந்து முக்கியமான நபர்களை அதிமுகவில் ஐக்கியமாக்க அறிவுறுத்தக் கூடும். குறிப்பாக தென் மாவட்டங்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டம் ஆகியவற்றில் வெற்றிக்கான வியூகங்களை பலமாக போட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.