காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்.. யாருக்கு, என்ன பயன்.. முழு விவரம் இதோ..!!

காவிரி ஆற்றை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டம் தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்துக்காக மொத்தம் 263 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக காவிரி கட்டளை கதவனை முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 110 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது

இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்ட பணிக்காக ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும் ரூ.331 கோடி செலவில் வெள்ள நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்கள் அமைக்கும் பணி 60% நிறைவடைந்த நிலையில் முதற்கட்ட பணிக்காக திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராகி வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சுமார் 52,332 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறக்கூடும். விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் குறித்தான அறிவிப்பை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.