தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசாரிடம் சிக்கிய 3 பிரித்தானியர்கள்: கலக்கத்தில் குடும்பம்


ஆபத்தான சுற்றுலாப்பயணி என அறியப்படும் பிரித்தானிய இளைஞர் உட்பட மூவரை தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசார் கைது செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தூதரக ரீதியான நடவடிக்கை

இதில், ஆபத்தான சுற்றுலாப்பயணி என அறியப்படும் 23 வயதான Miles Routledge, தொண்டுநிறுவனம் சார்பில் மருத்துவ உதவிகளை மேற்கொள்ளும் 53 வயதான கெவின் கார்ன்வெல் மற்றும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹொட்டல் ஒன்றை நடத்திவரும் பிரித்தானியர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசாரிடம் சிக்கிய 3 பிரித்தானியர்கள்: கலக்கத்தில் குடும்பம் | Three Brits Seized Taliban Notorious Police

@PA

இந்த விவகாரம் தொடர்பில் தூதரக ரீதியான நடவடிக்கைகளுக்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

Miles Routledge என்ற இளைஞரை பொறுத்தமட்டில், உலகின் மிக ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களுக்கு மட்டும் சுற்றுலா சென்று, அங்குள்ள காட்சிகளை காணொளியாக வெளியிட்டு வருபவர்.

2021 ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சுற்றுலா சென்றவர், அப்போதும் தலிபான்களின் பிடியில் சிக்கினார்.
ஆனால் அதன் பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் விமானத்தில், அங்கு பணியாற்றி வந்த பிரித்தானியர்கள் மற்றும் ஆப்கான் மக்களுடன் வெளியேற்றப்பட்டார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுப்பை அடுத்து, போர் தீவிரமடைந்துவரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் உக்ரைனுக்கு பயணப்பட்டுள்ளார்.
மேலும், போரின் மத்தியிலும் உக்ரைன் நாடு, பிரித்தானியாவின் பர்மிங்காமை விட பாதுகாப்பானது என கூறியிருந்தார்.

சட்டவிரோதமாக துப்பாக்கி

தற்போது தலிபான்கள் கையில் சிக்கியுள்ள அவரது அலைபேசி முடக்கப்பட்டுள்ளதுடன், அவரது இன்ஸ்டா பக்கமும் செயலில் இல்லை என்றே கூறுகின்றனர்.

தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசாரிடம் சிக்கிய 3 பிரித்தானியர்கள்: கலக்கத்தில் குடும்பம் | Three Brits Seized Taliban Notorious Police Credit: @4chan.org

இதனிடையே, கெவின் கார்ன்வெல் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்தே அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறி அவரை கைது செய்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கைதான இன்னொருவர், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பெயர் வெளியிடப்படவில்லை.
மேலும், மூவர் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.