ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.15,920 கோடியாக உயர்வு

புதுடெல்லி:  ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது எப்போதும் இல்லாதவகையில் 2022-2023ம் ஆண்டில்  ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில்,‘‘நாட்டில் ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த  2018-2019ம் ஆண்டில் 10,745கோடியாகவும் இருந்தது. 2019-2020ம் ஆண்டில் ரூ.9115 கோடி மற்றும் 2020-2021ம் ஆண்டில் ரூ.8434கோடியாக இருந்தது.   

2021-2022ம் ஆண்டில் ரூ.12,814கோடி மதிப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2022-2023ம் நிதியாண்டில் ஏற்றுமதியானது ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளது.  2024-2025ம் ஆண்டில் ரூ.1,75,000கோடி ராணுவ தளவாடப்பொருட்கள் உற்பத்தி செய்யவும் மற்றும் ஏற்றுமதியை ரூ.35ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.