சென்னை: சமூக வலைதள பதிவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அம்பேத்கரின் 125 அடி சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதல்வருக்கு பாராட்டுகள்.
புத்தர் சிலைக்கும் தெலங்கானா தலைமைச் செயலக கட்டிடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் சாலப்பொருத்தமானது. பிரமிப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.