
உச்சி வெயில் வெப்பம் மூலம் இளைஞர் ஒருவர் வீட்டு மொட்டை மாடியில் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உள்ளது. இந்நிலையில், அந்த வெயிலின் வெப்பம் மூலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆம்லெட் போட்டி வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முட்டையை அடுப்பு இல்லாமல் ஆம்லெட்டாக்கும் அளவிற்கு அங்கு வெயில் கொளுத்துகிறது. கொடூரமான வெப்ப அலைகள் காரணமாக அம்மாநில அரசு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த வைரல் வீடியோ மொட்டை மாடியில் மொபைல் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனின் அதீத வெப்பம் காரணமாக எண்ணெய், கேஸ் இல்லாமல் முட்டை ஆம்லெட்டாக மாறுவதை பார்க்க முடிகிறது.
newstm.in