2024 மக்களவை தேர்தல்: ‘ நாம சேரணும்’.. வொர்க் அவுட் ஆகும் ஸ்டாலின் பிளான்.. பெருசா ஏதோ நடக்க போகுது.!

எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2024 தேர்தல்

அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க முயன்று வருகிறது. ஆனால் எப்பாடு பட்டாவது பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றன.

ஏனெனில் எதிர்கட்சிகளை குறிவைத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு வேட்டையாடி வருவதால், எதிர்கட்சிகள் பொறுமை இழந்துள்ளன. அதேபோல் மேற்கூறிய விசாரணை அமைப்புகள் பாஜகவின் அடியாட்களாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வந்த எதிர்கட்சிகள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததும் குறிப்பிடதக்கது.

நோ சொன்ன மம்தா

இந்த சூழலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளின் மூண்றாம் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்தால், அது பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என ஜனநாயகவாதிகள் எச்சரித்துள்ளனர்.

அதனால் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது செல்லுபடியாகாது என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழா உடைத்து பேசினார். இந்தநிலையில் எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கு பாஜக சமீபத்திய காலங்களில் வித்திடுவதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தின் போது அவரின் தீவிர அரசியல் எதிரிகளான மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால், பினராய் விஜயன் ஆகியோர் குரல் கொடுத்தனர். அதேபோல் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய போது எதிர்கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தனர். மேலும் மம்தா பானர்ஜியின் மருமகனுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இத்தகைய நிகழ்வுகள் கூட்டணியை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

திடீர் பல்டி

இந்தசூழலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’‘எனக்கு ஈகோ இல்லை. அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்தை பீகாரில் நடத்த வேண்டும் என முதல்வர் நிதிஷ்குமாருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை பறைசாற்றுவோம். பொய்களாலும், வதந்திகளாலும் பாஜக தன்னை ஹீரோவாக நினைத்து கொள்கிறது. பாஜகவை தோற்கடிக்க நாம் இணைய வேண்டும்’’ என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.