The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' பட சர்ச்சை: தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை.!

இந்தியில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. விபுல் அம்ருத்லா ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ய அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
‘தி கேரளா ஸ்டோரி’ டிரைலரில் ஹிஜாப் அணிந்து வரும் ஒரு பெண், தான் பிற மாதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தள்ளப்பட்டுள்ளேன் என்றும் பேசியிருந்தார். மேலும் இதே போல் 32 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த டிரைலர் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், இந்த டிரைலர் ‘டிஸ்கிரிப்ஷனில்’ 32 ஆயிரம் பெண்களை பற்றிய உண்மை கதை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து பேக் அடித்த படக்குழு ‘டிஸ்கிரிப்ஷனில்’ இருந்த 32 ஆயிரத்தை 3 ஆக மாற்றினர். இந்தப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

Manobala Son: என் அப்பாவுக்கு நீங்க தான் உயிர்.. கலங்கிய நடிகர் மனோபாலாவின் மகன்.!

மேலும் இந்தப்படம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும் போது, மதச்சார்ப்பின்மை கொண்ட கேரளா மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எடுத்துள்ளனர். சங்கபரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்பது டிரெய்லரை பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

டைவர்ஸ் போட்டோ ஷுட் நடத்த இதுதான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை.!

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது குறித்து மாநில உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், இந்தப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை அனுமதிக்க வேண்டாம் என அரசுக்கு மாநில உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.