ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல : குடியரசுத் தலைவர் முர்மு

குந்த்தி, ஜார்க்கண்ட் ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்ததால் எவ்விதத்திலும் பாதகம் இல்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்று ஜார்க்கண்ட் மாநிலம் குந்த்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் வியாழக்கிழமை (மே 25) ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அவர் இம்மாநாட்டில் சிறப்புரை ஆற்றி உள்ளார். முர்மு தனது உரையில், “ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல. நமது நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும் எண்ணற்ற உதாரணங்களைக் காணலாம்” என்றார். சமூக சீர்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு, ராணுவம் மற்றும் இதர துறைகளில் மதிப்புமிகு பங்களிப்பு செய்த பெண்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். . “எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டைத் தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்”  எனப் பேசி உள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.