தலைமை ஆசிரியையை செருப்பால் அடித்த சக ஆசிரியர்கள்… ஷாக்கிங் வீடியோ!

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் பள்ளி கொரியா பஞ்சாயத்து வித்யாலயா. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஆசிரியைகளுக்குள் நடந்த அடிதடி வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த கொரியா வித்யாலயா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் காந்தி குமாரி. இதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அனிதா குமாரி. இந்நிலையில் தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறையின் ஜன்னலை மூடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஜன்னலை மூட அனிதா குமாரி மறுத்தாக கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை காவியா அறிவுமணி… சேலையில் அசத்தல் போஸ்!

இதுதொடர்பாக தலைமை ஆசிரியை காந்தி குமாரி மற்றும் சக ஆசிரியைகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருமே தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதனை பார்த்த மாணவர்களையும் அந்த ஆசிரியைகள் விரட்டியுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் தலைமை ஆசிரியை காந்தி குமாரி வகுப்பறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அனிதா குமாரி தலைமை ஆசிரயை காந்தி குமாரியை சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார். அப்போது மற்றொரு ஆசிரியையும் சேர்ந்து தலைமை ஆசிரியை கீழே தள்ளி அவரது முடியை பிடித்து இழுத்து தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். இரண்டு ஆசிரியைகளும் செருப்பு மற்றும் குச்சியால் தலைமை ஆசிரியையை அடித்து துவைத்தனர்.

திருப்பதிக்கு திடீரென படையெடுக்கும் பக்தர்கள்… காரணம் தெரியுமா?

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தலையீட்டு ஆசிரியைகளின் அடிதடியை நிறுத்தினர். ஆசிரியையைகளின் இந்த மோதலை அப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். தலைமை ஆசிரியை ஒருவரை சக ஆசிரியைகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு ஆசிரியர்களுக்கும் இடையே தனிப்பட்ட தகராறு இருந்ததும் அது தற்போது பள்ளிக்கூடம் வரை வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

IT Raid: கையில் கொண்டு செல்லப்பட்ட பை… பெண் அதிகாரியை சுற்று வளைத்து சோதனை செய்த திமுகவினர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.