போனா வராது அவ்ளோ தான் சொல்லிட்டேன்.. ப்ளஸ் 2 மாணவர்களுக்கு அலர்ட் அறிவிப்பு.!

வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பிஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்க்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் 08.05.2023 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுப்பிரிவினர் ரூ.200ஐயும், பட்டியலின மாணவர்கள் 100 ரூபாயை விண்ணப்ப கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/- (SC/ST ரூ. 100/-) மற்றும் தபால் கட்டணம் ரூ. 50/- க்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் இரா. ரமேஷ்குமார், இணைபேராசிரியர் Mobile NO. 9884159410 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை – 600 098ஐ அணுகலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.