2023 TVS Apache Bikes on-road Price in Tamil Nadu – டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் மிக பிரபலமான டிவிஎஸ் அப்பாச்சி பைக் சீரிஸ் மாடலில் உள்ள என்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2005 ஆம் ஆண்டு முதன்முறையாக அப்பாச்சி 150 என்ற பெயரில் முதல்முறையாக வெளியிடப்பட்டது. தற்பொழுது அப்பாச்சி பைக் தொடரில் அப்பாச்சி RTR 160, அப்பாச்சி RTR 160 4V,  அப்பாச்சி RTR 180 மற்றும் அப்பாச்சி RTR 200 4V ஆகியவற்றுடன் ஃபேரிங் ஸ்டைலை பெற்ற அப்பாச்சி RR 310 பைக் மாடலும் உள்ளது. ஸ்பெஷல் எடிசன் மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட அப்பாச்சி RP 165 சந்தையில் 200 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

2023 TVS Apache RTR 160 2v price

2023 TVS Apache RTR 160

துவக்கநிலை சந்தையில் கிடைக்கின்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் 2 வால்வுகளை பெற்ற 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 16.04 PS பவரை ஸ்போர்ட் மோடில் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று நீலம், சிவப்பு, கிரே, வெள்ளை மற்றும் கருப்பு என ஐந்து நிறத்தில் கிடைக்கின்றது.

இந்த மாடலில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் அல்லது டிஸ்க் என இருவிதமான ஆப்ஷனுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை RM Drum – ₹ 1,19,320, RM Disc – ₹ 1,22,820 மற்றும் RM Disc BT ₹ 1,26,120 ஆகும். RTR 160 2V போட்டியாளர்கள் பல்சர் NS160,  பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, யமஹா FZ-S Fi, சுசூகி ஜிக்ஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. 

 TVS Apache RTR 160
Engine Displacement (CC) 159.7 cc Fi, Air cooled, SOHC
Power Sport : 16.04 hp at 8750 rpm

Urban/ Rain : 13.32 hp at 8000 rpm

Torque Sport : 13.85 Nm at 7000 rpm,

Urban/ Rain : 12.7 Nm at 6500 rpm

Gear Box 5 Speed

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை

  • RM Drum – ₹  1,45,795
  • RM Disc – ₹ 1,49,646
  • RM Disc BT – ₹ 1,53,276

2023 TVS Apache RTR 160 4v on-road price

2023 TVS Apache RTR 160 4V

அடுத்து 160cc சந்தையில் கிடைக்கின்ற மற்றொரு அப்பாச்சி பைக் மாடலான RTR 160 4V மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்டதாக உள்ள மாடலில் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 4 வால்வுகளை பெற்ற 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் அதிகபட்சமாக  9250 rpm-ல் 17.55 PS பவரை ஸ்போர்ட் மோடில் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்று ரேசிங் ரெட், மெட்டாலிக் ப்ளூ, நைட் கருப்பு மற்றும் மேட் கருப்பு என நான்கு நிறத்தில் கிடைக்கின்றது.

இந்த மாடலில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் அல்லது டிஸ்க் என இருவிதமான ஆப்ஷனுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்பெஷல் எடிசன் மாடலில் சிவப்பு நிற அலாய் வீல், அட்ஜெஸ்பிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது.

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை Drum – ₹ 1,23,770, RM Disc – ₹ 1,27,270, RM Disc BT ₹ 1,30,570 மற்றும் Special Edition ₹ 1,32,070 ஆகும். RTR 160 4V போட்டியாளர்கள் பல்சர் NS160,  பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, யமஹா FZ-S Fi, சுசூகி ஜிக்ஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. 

 TVS Apache RTR 160 4V
Engine Displacement (CC) 159.7 cc Fi, oil cooled, SOHC
Power Sport : 17.55 hp at 9250 rpm

Urban/ Rain : 15.64 hp at 8600 rpm

Torque Sport : 14.73 Nm at 7250 rpm,

Urban/ Rain : 14.14 Nm at 7250 rpm

Gear Box 5 Speed

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை

  • Drum – ₹ 1,50,726
  • RM Disc – ₹ 1,54,576
  • RM Disc BT ₹ 1,58,207
  • Special Edition ₹ 1,59,857

2023 TVS Apache RTR 180

2023 TVS Apache RTR 180

180cc சந்தையில் கிடைக்கின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் 2 வால்வுகளை பெற்ற 177.4 cc ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக பவர் 17.02 PS ஆனது 9000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் ஆப்ஷனுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறத்தில் கிடைக்கின்றது.

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை RM Disc BT – 1,32,120 ஆகும். ஆர்டிஆர் 180 போட்டியாளர் ஹோண்டா ஹார்னெட் 2.0 உள்ளது.

 TVS Apache RTR 180
Engine Displacement (CC) 177.4 cc Fi, oil cooled, SOHC
Power Sport : 17.02 hp at 9000 rpm

Urban/ Rain : 14.54 hp at 8200 rpm

Torque Sport : 15.5 Nm at 7000 rpm,

Urban/ Rain : 14.2 Nm at 6000 rpm

Gear Box 5 Speed

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை RM Disc BT – ₹ 1,60,149

2023 TVS Apache RTR 200 4v price list

2023 TVS Apache RTR 200 4V

டிவிஎஸ் அப்பாச்சி பைக் சீரிஸ் முறையில் அப்பாச்சி RTR 200 4V மாடலில் 4 வால்வுகளை பெற்ற 197.75 cc ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக பவர் 20.82 ps ஆனது 9000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளுடன் ரேசிங் டெலிமேட்டிக்ஸ் பெற்ற அட்ஜெஸ்பிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் ஆப்ஷனுடன் சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று நீளம், வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறத்தில் கிடைக்கின்றது.

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை Single Channel ABS ₹ 1,42,037 மற்றும் 2Ch R-Mode ₹ 1,47,037 ஆகும். ஆர்டிஆர் 200 4வி போட்டியாளர் பல்சர் NS200 மற்றும் கேடிஎம் 200 டியூக் உள்ளது.

 TVS Apache RTR 200 4V
Engine Displacement (CC) 197.75 cc Fi, oil cooled, SOHC
Power Sport : 20.82 hp at 9000 rpm

Urban/ Rain : 17.32 hp at 7800 rpm

Torque Sport : 17.25 Nm at 7250 rpm,

Urban/ Rain : 16.51 Nm at 5750 rpm

Gear Box 5 Speed

2023 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

  • Single Channel ABS ₹ 1,70,133
  • 2Ch R-Mode ₹ 1,75,364

2023 TVS Apache RR 310

2023 TVS Apache RR 310

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைல் அப்பாச்சி RR 310 பைக்கில் திராட்டிள் பை வயர், சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட், பிரத்தியேகமான டிஜிட்டல் கிளஸ்ட்டர், பை-எல்இடி ஹெட்லைட் என பலவற்றை கொண்டுள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களை பெற்று 312.2cc லிக்யூடு கூல்டு என்ஜின் ஸ்போர்ட்ஸ் மோடில் 34 PS பவரை 9700rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. டாப் ஸ்பீடு 160 km/h வேகத்தை கொண்டு ரைடிங் மோடுகள் பெற்றதாக அமைந்துள்ளது.

கூடுதலாக வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை வழங்கும் BTO முறையிலும் கிடைக்கின்றது.

2023 டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 2,72,000. இந்த மாடலின் போட்டியாளர் பிஎம்டபிள்யூ G310 RR, கேடிஎம் RC 390 போன்றவை உள்ளது.

 TVS Apache RR 310
Engine Displacement (CC) 312.2 cc Fi, liquid cooled, DOHC
Power Sport/Track : 34 hp at 9700 rpm

Urban/ Rain : 25.8 hp at 7600 rpm

Torque Sport/Track – 27.3 Nm at 7700 rpm

Urban/rain 25 Nm at 6700 rpm

Gear Box 6 Speed

2023 டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 3,12,880

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.