Asiana Airlines: Passenger arrested for opening plane door during South Korea flight | தரையிறங்கும்போது விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி கைது

சியோல்: தென் கொரியாவில் விமானம் தரையிறங்கும்போது, அவசர கால கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க பயணியை போலீசார் கைது செய்தனர்.

தென்கொரியாவில், ஜெஜூ தீவில் இருந்து 194 பயணிகளுடன் ஆசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. டேகு சர்வதேச விமான நிலையத்தில், விமானம் தரையிறங்க துவங்கும் போது பயணி ஒருவர், விமானத்தின் அவசரகால கதவை திறந்தார். இருப்பினும் அப்படியே விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதில், சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இன்னும் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டார்.

விமானம் தரையிறங்கி கொண்டிருந்ததால், அந்த நபரை யாராலும் தடுக்க முடியவில்லை. கதவை திறந்த அந்த பயணி, குதிக்க முயற்சி செய்ததாகவும் சக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.