Ashish Vidyarthi – எனக்கு இப்போது 57தான் 60 இல்லை – ஆஷிஷ் வித்யார்த்தி பதிலடி

டெல்லி: Ashish Vidyarthi (ஆஷிஷ் வித்யார்த்தி) இரண்டாவது திருமணத்தை சிலர் விமர்சனம் செய்த சூழலில் தனக்கு இப்போது 57 வயதுதான் ஆகிறது 60 வயது ஆகவில்லை என ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்திருக்கிறார்.

ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வெகு பிரபலமாகியிருந்த சூழலில் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அறிமுகமான முதல் தமிழ் படமே கமர்ஷியல் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி ஆஷிஷ் வித்யார்த்தியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கவர தமிழில் அவருக்கு தொடர்ந்து அமைந்தன.

ஐந்து படங்கள்:

அதனையடுத்து ரஜினி நடித்த பாபா படத்தில் அவர் ஏற்றிருந்த இப்போ ராமசாமி என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனையடுத்து, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் ஆகிய படங்கள் என மொத்தம் அந்த வருடத்தில் மட்டும் ஐந்து தமிழ் படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி பிற மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார்.

கில்லியில் ஆஷிஷ்:

தமிழில் அவரை பரவலாக அடையாளப்படுத்தியது கில்லி படம். தரணி இயக்கி விஜய் நடித்து மெகா ஹிட்டான படம்தான் கில்லி. அதில் விஜய்க்கு தந்தையாகவும், காவல் துறை அதிகாரியாகவும் கலக்கியிருந்தார். தொடர்ந்து ஆறு, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்த அவர் கடைசியாக தமிழில் என் வழி தனி வழி படத்தில் நடித்திருந்தார்.

 Ashish Vidyarthi explains about his second Marriage

முதல் திருமணம்:

ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகை, பாடகி, நாடக கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சில காலம் சிங்கிளாக இருந்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.

இரண்டாவது திருமணம்:

இந்தச் சூழ்நிலையில் ரூபாலி என்பவரை சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். அதேசமயம் 60ஆவது வயதில் இரண்டாவது திருமணம் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என சிலர் விமர்சனத்தையும் முன்வைத்தனர். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில்,

 Ashish Vidyarthi explains about his second Marriage

ஒரே மாதிரி இருக்காது எல்லோரது வாழ்க்கையும்:

“60 வயதாகும் உனக்கு திருமணம் தேவையா? முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா? என்று பலர் என்னை விமர்சிக்கின்றனர். இந்த வயதில் இன்னொரு துணை எதற்கு என்றும் கேலி செய்கின்றனர். எல்லோரது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது. வேறு வேறு நம்பிக்கையோடு வாழ்கிறோம்.

 Ashish Vidyarthi explains about his second Marriage

சந்தோஷமாக இருப்பதைத்தான் எதிர்பார்ப்பார்கள்:

ஆனால் எல்லோரும் பொதுவாக எதிர்பார்ப்பது வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதுதான். 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட எனது முதல் மனைவிக்கும் எனக்கும் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் வேறுவேறாக இருந்தன. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் பிரிந்து விட்டோம். எனக்கு ஒரு துணை வேண்டும் என்று தோன்றியது.

55 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதும் சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூபாலியை சந்தித்து காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம். எனக்கு இப்போது 57 வயதுதான். இன்னும் 60 வயது ஆகிவிடவில்லை. காதலில் வயதுக்கு வேலை இல்லை. இருவரும் சந்தோஷமாக இணைந்து பயணிப்போம்” என தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.